எந்த அரசாங்கம் இருந்தாலும் எமது மத உரிமைகளை விட்டுக்கொடுக்க முடியாது என ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா இன்று அவரது அலுவலகத்தில் ஊடக சந்திப்பில் இவ்வாறு கருத்து தெரிவித்தார். கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் ஜனாஸாக்களை அவர்களது எதிர்ப்பையும் மீறி பலவந்தமாக தகனம் செய்கின்றனர். இந்த விடயத்தில் உயர் நீதி மன்றம் ஊடாக உரிமைகளை பெற்றுக்கொள்ளும் நோக்கிலேயே பிறந்து 20நாளில் எரிக்கப்பட்ட சிசுவின் ஜனாஸா விடயத்தை நீதி மன்றம் வரை கொண்டு சென்றேன். பலவந்தமாக எரிக்கப்பட்டு வரும் ஜனாஸாக்களால் எமது மனித உரிமை மீறப்பட்டு வருகின்றன. நாம் அனைவரும் இலங்கையர்கள் அதனால் தான் நாம் ஜனநாயக ரீதியாக போராடுகின்றோம் என அவர் மேலும் தெரிவித்தார்
Post a Comment
எமது vision social media வின் இணையத்தளத்திற்கு உள் நுழைந்தமைக்கு மிக்க நன்றி.
உண்மை தகவல்களை அறிய எம்முடன் தொடர்ந்தும் இணைத்திருங்கள்.
மற்றும் எமது இணையதளதின் தகவல்களை ஏனையோர்களுடன் பரிமாற்றி கொள்ளவும்.
நன்றி 🤝