கண்டி - பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட மாணவர்கள் 08 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.பரீட்சைக்கு தோற்றவிருந்த 300 மாணவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக தலைமை வைத்திய அதிகாரி சமரக்கொடி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் குறித்த தொற்றாளர்களுடன் தொடர்புடைய மேலும் 40 மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை பரீட்சைகள் தற்காலிகமாக பிற்போடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதனிடையே களனி பல்கலைக்கழக மாணவர்கள் ஐவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை அண்மையில் உறுதிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment
எமது vision social media வின் இணையத்தளத்திற்கு உள் நுழைந்தமைக்கு மிக்க நன்றி.
உண்மை தகவல்களை அறிய எம்முடன் தொடர்ந்தும் இணைத்திருங்கள்.
மற்றும் எமது இணையதளதின் தகவல்களை ஏனையோர்களுடன் பரிமாற்றி கொள்ளவும்.
நன்றி 🤝