நாட்டில் பரவிவரும் புதிய வீரியம் கொண்ட கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நாடு முழுமையாக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் முடக்கப்படாது என ஆரம்ப சுகாதாரம், தொற்று நோய் தடுப்பு மற்றும் கொரோனா கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணான்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் சில பயண தடைகள் விதிக்கப்படலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வீரியம் கொண்ட கொரோனா தொற்றை எதிர்கொள்ளும் விதம் குறித்தும், அதனை கட்டுப்படுத்தும் விதம் குறித்தும்இன்றைய தினம் விசேட கலந்துரையாடலொன்று நடத்தப்படவுள்ளதாக அவர் கூறுகின்றார்.
புதிய வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்ட நபர்கள் மற்றும் அவர்கள் அடையாளம் காணப்பட்ட பிரதேசங்கள் தொடர்பில் தயாரிக்கப்பட்டுள்ள அறிக்கையை அடிப்படையாக வைத்து, இன்றைய கலந்துரையாடல் நடத்தப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
எதிர்வரும் காலங்களில் பெரும் எண்ணிக்கையிலானோர் கலந்துக்கொள்ளும் திருமண நிகழ்வுகள் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு தடை விதிப்பது குறித்தும் இன்றைய கலந்துரையாடலில் ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Post a Comment
எமது vision social media வின் இணையத்தளத்திற்கு உள் நுழைந்தமைக்கு மிக்க நன்றி.
உண்மை தகவல்களை அறிய எம்முடன் தொடர்ந்தும் இணைத்திருங்கள்.
மற்றும் எமது இணையதளதின் தகவல்களை ஏனையோர்களுடன் பரிமாற்றி கொள்ளவும்.
நன்றி 🤝