='https://pagead2.googlesyndication.com/ pagead/js/adsbygoogle.js'/> 1000 மத்ரஸா பாடசாலைகளுக்கு தடையா?

1000 மத்ரஸா பாடசாலைகளுக்கு தடையா?

 



இலங்கையில் உள்ள அனைத்து மதரஸாக்களுக்கும் தடை விதிக்கப்படாது என்று பொது பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர இன்று பாராளுமன்றத்தில் உறுதியளித்தார்.

தேசிய கல்வி கொள்கையை மீறும் மதரஸாக்கள் மட்டுமே தடை செய்யப்படும் என்று அவர் மேலும் கூறினார்.


"5-16 வயதுகளுக்கு உட்பட்டோருக்கு மார்க்கம் மற்றும் மொழியை மட்டுமே கற்பிக்கும் மதரஸாக்கள் தடை செய்யப்படும்" என்று அவர் தெரிவித்தார்.

இந்த முடிவுக்கு முஸ்லிம் குழுக்களும், அமைப்புகளும் உறுதுணையாக இருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

இலங்கையில் 2000 க்கும் மேற்பட்ட மதரஸாக்கள் இருப்பதாக சரத் வீரசேகர தெரிவித்திருந்தார்.


இலங்கையில் யாரும் பாடசாலையொன்றை திறந்து அவர்கள் விரும்புவதை கற்பிக்க முடியாது என்று அவர் கூறியிருந்தார்.

அனைத்து பாடசாலைகளும் தேசிய கல்வி கொள்கையை பின்பற்ற வேண்டும் என்று அமைச்சர் கூறினார்.

இதன் அடிப்படையில், இலங்கையில் 1000 க்கும் மேற்பட்ட மதரஸாக்கள் தடை செய்யப்படும் என்று வீரசேகர தெரிவித்தார்.


Post a Comment

எமது vision social media வின் இணையத்தளத்திற்கு உள் நுழைந்தமைக்கு மிக்க நன்றி.
உண்மை தகவல்களை அறிய எம்முடன் தொடர்ந்தும் இணைத்திருங்கள்.
மற்றும் எமது இணையதளதின் தகவல்களை ஏனையோர்களுடன் பரிமாற்றி கொள்ளவும்.
நன்றி 🤝

Previous Post Next Post
Advertisment Available Here உங்கள் விளம்பரத்தை இங்கே பதிவிடலாம் அழையுங்கள் - 075-481 67 68 075-271 73 22 E-mai - visionsocialmediatamil@gmail.com