='https://pagead2.googlesyndication.com/ pagead/js/adsbygoogle.js'/> மனைவியின் தொல்லை தாங்க முடியவில்லை அதனால் தான் புத்தர் சிலை உடைத்தேன் 👇

மனைவியின் தொல்லை தாங்க முடியவில்லை அதனால் தான் புத்தர் சிலை உடைத்தேன் 👇

 


குளியாப்பிட்டி - ரத்மலவத்தையில் புத்தர் சிலைகளை சேதப்படுத்திய இந்தியரை, எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க குளியாப்பிட்டி நீதிவான் ஜனனி சசிகலா விஜெதுங்க நேற்று (19) உத்தரவிட்டார்.

சந்தேக நபர் இந்தியாவின் கேரளாவின் பரக்கலில் வசிக்கும் புன்னி கஞ்சரிஷ்ணன் நாயர் திலிப்குமார் என அடையாளம் காணப்பட்டார்.

குளியாப்பிட்டி, ரத்மலவத்தையில் பெண்ணொருவரை திருமணம் செய்து தற்காலிக விசாவில் வசித்து வருகிறார். சந்தேக நபர் சுமார் 16 ஆண்டுகளாக இலங்கையில் வசித்து வந்தார்.


சம்பவதினத்திலன்று, சட்டவிரோதமாக விகாரைக்குள் நுழைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

அந்த நபர் அடிக்கடி குடிபோதையில் இருந்ததாகவும், அவரது மனைவியுடன் சண்டையிட்டதாகவும் பொலிசார் தெரிவித்தனர். நான்கு தலைகள் கொண்ட சிரச புத்தர் சிலை உடைக்கப்பட்டதன் காரணத்தை கண்டுபிடிக்க வேண்டுமென்பதால் சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடுமாறு பொலிசார் கோரினர்.


சந்தேக நபரின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, தனது வாடிக்கையாளர் குடிப்பழக்கமுடையவர் என்றும், தனது மனைவியின் துன்புறுத்தல் தாங்க முடியாமல் இரவில் விகாரையில் தங்குவதாகவும், மதுபோதையில் அவர் ஏதேனும் அறியாமல் நடந்ததா என்பதை யோசித்து வருவதாகவும் கூறினார்.

எனினும், பிணைக் கோரிக்கையை நிராகரித்த நீதிவான் சந்தேகநபரை எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார். 

Post a Comment

எமது vision social media வின் இணையத்தளத்திற்கு உள் நுழைந்தமைக்கு மிக்க நன்றி.
உண்மை தகவல்களை அறிய எம்முடன் தொடர்ந்தும் இணைத்திருங்கள்.
மற்றும் எமது இணையதளதின் தகவல்களை ஏனையோர்களுடன் பரிமாற்றி கொள்ளவும்.
நன்றி 🤝

Previous Post Next Post
Advertisment Available Here உங்கள் விளம்பரத்தை இங்கே பதிவிடலாம் அழையுங்கள் - 075-481 67 68 075-271 73 22 E-mai - visionsocialmediatamil@gmail.com