பரீட்சையின் பெறுபேற்றை கொண்டு மாணவர்கள் காலதாமதமில்லாமல் பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
கண்டி - கலகெதர பகுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
கடந்த மாரச் மாதம் இடம்பெற்று முடிந்த 2020 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறு ஜூன் மாதம் வெளியிடப்படும்.
உயர்தர கற்கையினை மேற்கொள்ள தகுதிபெற்ற மாணவர்களுக்கான உயர்தர கற்றல் நடவடிக்கைகள் ஜூலை மாதம் தொடக்கம் ஆரம்பிக்கப்படும். மேலும் காலதாமதமில்லாமல் மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளை பூர்த்தி செய்ய வேண்டிய தேவை காணப்படுகிறது.
பல்கலைக்கழகங்களில் காணப்படும் பௌதீள வள பற்றாக்குறைக்கு தீர்வு காண்பது தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு யோசனைகளை முன்வைத்துள்ளது.
பல்கலைழக மாணவர்களின் தங்குமிட பற்றாக்குறைக்கு தீர்வுகாண உரிய தரப்பினருடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.
Post a Comment
எமது vision social media வின் இணையத்தளத்திற்கு உள் நுழைந்தமைக்கு மிக்க நன்றி.
உண்மை தகவல்களை அறிய எம்முடன் தொடர்ந்தும் இணைத்திருங்கள்.
மற்றும் எமது இணையதளதின் தகவல்களை ஏனையோர்களுடன் பரிமாற்றி கொள்ளவும்.
நன்றி 🤝