மீடியாகொட பகுதியில் வாலிபர் ஒருவரின் கொலை தொடர்பில் தேடப்பட்டுவரும் பிரதேச சபை உறுப்பினர் தொடர்பில் தகவல்களை வழங்கும் நபருக்கு தகுந்த சன்மானம் வழங்கப்படும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்தார்.
அதேவேளை சந்தேக நபருக்கு அடைக்கலம் கொடுப்பவருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் கடந்த 25ஆம் திகதி மீடியாகொட பகுதியில் மாலை யூ. எச். தரிந்து குணசேகர எனும் 24வயதுடைய இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபர்கள் இளைஞரின் கையை வெட்டி வேறொரு இடத்தில் விட்டுச் சென்றுள்ளனர். எனினும் சந்தேக நபர்கள் நால்வரும் தமாகவே மீடியாகொட பொலிஸில் சரணடைந்து உள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் குறிப்பிட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களின் விசாரணைகளின் மூலம் குறித்த மீடியாகொட பிரதேச சபை உறுப்பினர் சக்தி மதுசங்க என்பவரே திட்டமிட்டு செய்துள்ளதாக தெரியவருகிறது.
சந்தேக நபர் தலைமறைவாகி உள்ளதாகவும் குறித்த நபரை பற்றி தகவல் கிடைக்கப்பெற்றால் 071-85 91 481 என்ற இலக்கத்திற்கு தகவல் வழங்குமாறு கேட்டுக்கொள்ளபடுகின்றனர்.
பிரதேச சபை உறுப்பினர் தொடர்பில் தகவல்களை வழங்கும் நபருக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் எனவும் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் குறிப்பிட்டார்.
Post a Comment
எமது vision social media வின் இணையத்தளத்திற்கு உள் நுழைந்தமைக்கு மிக்க நன்றி.
உண்மை தகவல்களை அறிய எம்முடன் தொடர்ந்தும் இணைத்திருங்கள்.
மற்றும் எமது இணையதளதின் தகவல்களை ஏனையோர்களுடன் பரிமாற்றி கொள்ளவும்.
நன்றி 🤝