சில மாதங்களுக்கு முன்னர் ஏற்கனவே கொரோனா வைரஸின் இன்னொரு புதிய வகையை பிரித்தானிய ஆய்வாளர்கள் கண்டுபிடித்திருந்தனர்.
இந்தநிலையில் மேலும் ஒரு புதிய வகை கொரோனா வைரஸ் தற்போது கண்டறியப்பட்டுள்ளது.
B.1.525 என பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய வகை கொரோன வைரஸ் தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய வகை வைரஸ் தொற்றை ஒத்து அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் வேல்ஸ்-இல் இருவரும், லண்டனில் 36 பேரும் இந்த வகை தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக எடின்பரோ பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
டென்மார்க், நைஜீரியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் இந்த புதிய வகை தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இந்த தொற்று ஏற்பட்டதற்கான அறிகுறிகள் சில பேருக்கு டிசம்பர் மாதத்திலேயே இருந்தது தெரியவந்துள்ளது.
இந்த புதிய வகை வைரஸ் காரணமாக எப்படிப்பட்ட பாதிப்பு ஏற்படலாம் என தற்போது ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நாம் என்றும் முதலிடமே
WE ARE ALWAYS FIRST
🇱🇰🌎🇱🇰🌎🇱🇰🌎🇱🇰🌎




Post a Comment
எமது vision social media வின் இணையத்தளத்திற்கு உள் நுழைந்தமைக்கு மிக்க நன்றி.
உண்மை தகவல்களை அறிய எம்முடன் தொடர்ந்தும் இணைத்திருங்கள்.
மற்றும் எமது இணையதளதின் தகவல்களை ஏனையோர்களுடன் பரிமாற்றி கொள்ளவும்.
நன்றி 🤝