இலங்கையின் உதைப்பந்தாட்ட தேசிய அணியின் பயிற்ச்சியிலிருந்து கொழும்பு உதைப்பந்தாட்ட கழக மத்திய கள வீரர் அஹமத் சஸ்னி விலகுவதாக இலங்கை உதைப்பந்து சம்மேளனம் அறிவித்துள்ளது.
தனிப்பட்ட காரணங்களுக்காக விலகுகின்றார் என தலைமைப் பயிற்றுவிப்பாளர் அமீர் அலாஜிக் தெரிவித்துள்ளார். கொவிட் 19 காரணமாக இலங்கை உதைப்பந்தாட்ட அணி உலகக்கிண்ண மற்றும் ஆசிய உதைப்பந்தாட்ட சம்மேளக்கிண்ண தகுதிகாண் போட்டிகள் நடைப்பெற இருந்த நிலையில் ஒத்திவைக்கப்பட்டிருந்தன. எனவே பயிற்சிகளை மீள ஆரம்பிக்கும் இலங்கை உதைப்பந்தாட்ட அணி இந்த தகுதிகாண் போட்டியினை கருதிற்கொண்டு செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Post a Comment
எமது vision social media வின் இணையத்தளத்திற்கு உள் நுழைந்தமைக்கு மிக்க நன்றி.
உண்மை தகவல்களை அறிய எம்முடன் தொடர்ந்தும் இணைத்திருங்கள்.
மற்றும் எமது இணையதளதின் தகவல்களை ஏனையோர்களுடன் பரிமாற்றி கொள்ளவும்.
நன்றி 🤝