அமெரிக்காவில் போயிங் நிறுவனத்தின் விமானம் பறக்கத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே நடுவானில் இன்ஜின் செயலிழந்ததால், கொலராடோ மாகாணத்தின் தலைநகரான டென்வருக்கு அருகில், குடியிருப்புப் பகுதியில் அந்த விமானத்தின் இன்ஜின் பாகங்கள் சிதறி விழுந்தன.
எனினும், போயிங் 777 ரகத்தை சேர்ந்த இந்த விமானத்தில் இருந்த 231 பயணிகள் மற்றும் 10 விமான ஊழியர்கள் டென்வர் விமான நிலையத்தில் பத்திரமாகத் தரையிறங்கினர். யாருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ப்ரூம்ஃபீல்ட் நகர காவலர்கள், விமான இன்ஜினின் முன் பக்கத்தில் இருக்கும் வளையம் போன்ற ஒரு பாகம், ஒரு வீட்டின் முன் தோட்டத்தில் விழுந்து கிடந்ததைப் படம் பிடித்திருக்கிறார்கள்.
விமானம் பறக்கத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே ஒரு பெரிய வெடிச் சத்தம் கேட்டது என விமானப் பயணிகள் இன்ஜின் செயலிழப்பை விளக்கினர்.
நேற்று (பெப்ரவரி 20, சனிக்கிழமை) இலங்கை நேரப்படி, மதியம் 1.00 மணிக்கு இந்த சம்பவம் நடந்ததுள்ளது .
யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான இந்த விமானம், டென்வர் விமான நிலையத்தில் இருந்து, ஹவாய் மாகாணத்தில் இருக்கும் ஹோனுலுலு தீவை நோக்கி புறப்பட்டது.
விமானம் பறக்கத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே அதன் வலதுபுறத்தில் உள்ள இன்ஜின் செயலிழந்துவிட்டது என எஃப்.ஏ.ஏ என்றழைக்கப்படும் அமெரிக்க விமானப் போக்குவரத்து இயக்குநகம் கூறியுள்ளது.
Post a Comment
எமது vision social media வின் இணையத்தளத்திற்கு உள் நுழைந்தமைக்கு மிக்க நன்றி.
உண்மை தகவல்களை அறிய எம்முடன் தொடர்ந்தும் இணைத்திருங்கள்.
மற்றும் எமது இணையதளதின் தகவல்களை ஏனையோர்களுடன் பரிமாற்றி கொள்ளவும்.
நன்றி 🤝