='https://pagead2.googlesyndication.com/ pagead/js/adsbygoogle.js'/> மூக்குக்கண்ணாடி அணிபவர்களுக்கு கொரோனா தொற்று தொற்றாதா??விபரம் உள்ளே 👇

மூக்குக்கண்ணாடி அணிபவர்களுக்கு கொரோனா தொற்று தொற்றாதா??விபரம் உள்ளே 👇


முக்குக் கண்ணாடி அணியாதவர்களை காட்டிலும் மூக்குக் கண்ணாடி அணியும் நபர்களுக்கு கொரோனா தொற்றுவதற்கான சாத்தியம் 3 மடங்கு குறைவாக காணப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியாவிலுள்ள ஆய்வுக் குழுவொன்றினால் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெவித்துள்ளன.


இதன்போது, 304 நபர்களை ஈடுபடுத்தி இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், மூக்கு கண்ணாடி அணிபவர்கள் குறைந்தளவில் தத்தமது முகத்தினை தொடுவதன் காரணமாக அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றுவதற்காக சாத்தியம் குறைவாக காணப்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஒவ்வொரு மனிதனும் சராசரியாக மணித்தியாலம் ஒன்றுக்கு 23 தடவைகளை தமது முகத்தை தொடுவதாகவும், அதில் சராசரியாக மூன்று தடவைகள் கண்களை தொடுகின்றனர் என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே, தொடர்ச்சியாக மூக்குக் கண்ணாடி அணிபவர்கள் தொடர்ந்தும் முகம் மற்றும் கண்களை தொடவதை தவிர்ப்பதன் காரணமாக அவர்களிடத்தில் கொரோனா தொற்றுக்கு ஆளாகும் சாத்தியம் குறைவாக காணப்படுவதாக ஆய்வாளர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.



Post a Comment

எமது vision social media வின் இணையத்தளத்திற்கு உள் நுழைந்தமைக்கு மிக்க நன்றி.
உண்மை தகவல்களை அறிய எம்முடன் தொடர்ந்தும் இணைத்திருங்கள்.
மற்றும் எமது இணையதளதின் தகவல்களை ஏனையோர்களுடன் பரிமாற்றி கொள்ளவும்.
நன்றி 🤝

Previous Post Next Post
Advertisment Available Here உங்கள் விளம்பரத்தை இங்கே பதிவிடலாம் அழையுங்கள் - 075-481 67 68 075-271 73 22 E-mai - visionsocialmediatamil@gmail.com