பாரதிய ஜனதா கட்சியை இலங்கையில் ஆரம்பிக்க இடமளிக்கவில்லை என்றால் இலங்கையை தமிழ் மாநிலம், இலங்கை மாநிலம் என இரண்டாக பிரித்து இரண்டு ஆளுநர்களின் கீழ் கொண்டு வந்து தமிழ் பிரதிநிதிகள் புது டில்லியின் நாடாளுமன்றத்திற்கு செல்ல முடியும் என வடமாகாண முன்னாள் சபை உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம் எச்சரித்துள்ளார்.
கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைகள் உலகம் முழுவதும் ஆரம்பிக்க முடியுமானால் பாரதிய ஜனதா கட்சியை ஏன் இலங்கையில் ஆரம்பிக்க முடியாது என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தியா இலங்கை உடன்படிக்கையின் படி இலங்கையின் காணிகளை இந்தியாவின் அனுமதியின்றி எவருக்கும் வழங்க முடியாது.
வடக்கில் உள்ள தீவுகளை சீனாவுக்கு வழங்கினால் அதற்கு எதிராக மக்களுடன் இடைவிடாத போராட்டத்தை நடத்த போவதாகவும் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
Post a Comment
எமது vision social media வின் இணையத்தளத்திற்கு உள் நுழைந்தமைக்கு மிக்க நன்றி.
உண்மை தகவல்களை அறிய எம்முடன் தொடர்ந்தும் இணைத்திருங்கள்.
மற்றும் எமது இணையதளதின் தகவல்களை ஏனையோர்களுடன் பரிமாற்றி கொள்ளவும்.
நன்றி 🤝