='https://pagead2.googlesyndication.com/ pagead/js/adsbygoogle.js'/> கொரோனா ஜனாஸாக்களை அடக்கவும், எரிக்கவும் முடியும் :நிபுணர்கள் குழு ஜெனிபர் பெரேரா :விபரம் உள்ளே 👇

கொரோனா ஜனாஸாக்களை அடக்கவும், எரிக்கவும் முடியும் :நிபுணர்கள் குழு ஜெனிபர் பெரேரா :விபரம் உள்ளே 👇


கொவிட் தொற்றினால்உயிரிழப்போரின் உடல்களை தகனம் மற்றும் அடக்கம் செய்வதற்கு தமது குழு அனுமதி வழங்கியதாக கொவிட் தொற்றில் உயிரிழப்போரின் இறுதி கிரியைகளை நடத்தும் விதம் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட புத்திஜீவிகள் குழுவின் தலைவர் பேராசிரியர் ஜெனிஃபர் பெரேரா தெரிவித்துள்ளார்.

பிரபல சிங்கள தொலைக்காட்சியான ஹிரு தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கொவிட் தொற்றில் உயிரிழப்போரின் உடல்களை அடக்கம் செய்வதற்கு விசேட பரிந்துரைகளின் அடிப்படையில் அனுமதி வழங்கியதாகவும் அவர் கூறியுள்ளார்.

கொரோனா தொற்றில் உயிரிழப்போரின் இறுதி கிரியைகளை நடத்தும் விதம் குறித்து ஆராய்வதற்காக, சுகாதார அமைச்சின் செயலாளர் S.H.முணசிங்கவினால், கடந்த டிசம்பர் மாதம் விசேட புத்திஜீவிகள் குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது.

இந்த குழுவின் அறிக்கை உரிய தரப்பிற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள போதிலும், அந்த அறிக்கை இதுவரை வெளியிடப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

கொவிட் தொற்றில் உயிரிழந்தோரின் உடலை வீட்டிற்கு கொண்டு செல்ல அனுமதிக்க முடியாது என்பதுடன், சடலம் மீதான பிரேத பரிசோதனைகளையும் நடத்த முடியாது என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

கொவிட் தொற்றில் உயிரிழக்கும் ஒருவரின் உடலை 24 மணித்தியாலத்திற்குள் தகனமோ. அடக்கமோ செய்ய வேண்டும் என தாம் பரிந்துரை முன்வைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

சடலத்தை அடக்கம் செய்ய வேண்டும் என்றால், நீருடன் கலக்காத வகையில் இரண்டு பைகளில் சடலத்தை இட்டு, சவப்பெட்டிக்குள் வைத்து அடக்கம் செய்ய வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, கொவிட் தொற்றில் உயிரிழப்பவரின் சடலத்தை, அவரது உறவினர்கள் நால்வருக்கு 5 நிமிடமேனும் காண்பிப்பதற்கும் அனுமதி அளிக்க வேண்டும் என பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளதாக குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

எமது vision social media வின் இணையத்தளத்திற்கு உள் நுழைந்தமைக்கு மிக்க நன்றி.
உண்மை தகவல்களை அறிய எம்முடன் தொடர்ந்தும் இணைத்திருங்கள்.
மற்றும் எமது இணையதளதின் தகவல்களை ஏனையோர்களுடன் பரிமாற்றி கொள்ளவும்.
நன்றி 🤝

Previous Post Next Post
Advertisment Available Here உங்கள் விளம்பரத்தை இங்கே பதிவிடலாம் அழையுங்கள் - 075-481 67 68 075-271 73 22 E-mai - visionsocialmediatamil@gmail.com