பொதுபல சேனாவை தடை செய்வதற்கு ஈஸ்டர் தாக்குதல் பற்றிய ஆணைக்குழு பரிந்துரைத்த போதிலும் அதனை நிராகரிப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
கொழும்பில் இன்று திங்கட்கிழமை நடந்த ஊடக சந்திப்பில் உரையாற்றிய கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து வெளியிட்டபோது
ஈஸ்டர் தாக்குதல் பற்றிய ஆணைக்குழு அறிக்கையில் உள்ள சில பரிந்துரைகளை அமுல்படுத்துவது சிரமமாகும். விசேடமாக பொதுபல சேனா அமைப்பு குறித்த பரிந்துரையை அமுல்படுத்துவதானது கடினமாகும்.
அரசாங்கத்தின் விருப்பமும் அதுகுறித்து இல்லை. அந்த அமைப்பை தடை செய்வதால் நன்மை ஏற்படும் என்றல்ல. ஆகவே அரசாங்கம் அவ்வமைப்பை தடை செய்யாது.
ஆனால் கல்வி குறித்த பரிந்துரைகளை அமுல்படுத்த முடியும். இனவாத சிந்தனைகள் பாட விதானங்களில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் அவற்றை நீக்க வேண்டும்.
மத்ரஸா நிலையங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட வேண்டும் உள்ளிட்ட பரிந்துரைகளை கல்வி அமைச்சு அனுமதிக்கின்றது“ என்றார்.
Post a Comment
எமது vision social media வின் இணையத்தளத்திற்கு உள் நுழைந்தமைக்கு மிக்க நன்றி.
உண்மை தகவல்களை அறிய எம்முடன் தொடர்ந்தும் இணைத்திருங்கள்.
மற்றும் எமது இணையதளதின் தகவல்களை ஏனையோர்களுடன் பரிமாற்றி கொள்ளவும்.
நன்றி 🤝