கிரிக்கெட் வீரர் ஷஹீன் அஃப்ரிடியின் குடும்பத்தினர் தனது மகள் அக்ஸாவை திருமணம் செய்துகொள்ள அணுகியுள்ளதை பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாஹித் அஃப்ரிடி உறுதிப்படுத்தியுள்ளார்.
எவ்வாறாயினும், ஷஹீன் அப்ரிடியின் தந்தை அயாஸ் கான் இந்த திருமண திட்டத்தை ஷாஹித் அப்ரிடியின் குடும்பத்தினரிடம் முன்வைத்ததாக பாகிஸ்தானின் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன, அதுவும் அவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
முன்னதாக, இது தொடர்பில் வதந்திகள் பரப்பட்டுக் கொண்டிருந்த நிலையில், இரு தரப்பினரும் இரு தொடர்பில் வெளிப்படையாக கருத்து வெளியிட்டுள்ளனர்.
அஃப்ரிடி தனது சமீபத்திய ட்விட்டர் பதிவில், இதனை உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் விதியிருந்தால் ஷஹீனும் அவரது மகளும் திருமணம் செய்து கொள்வார்கள் என நம்புவதாக தெரிவித்திருந்தார்.
எவ்வாறாயினும், ஷஹீன் அப்ரிடியின் தந்தை அயாஸ் கான் இந்த திருமண திட்டத்தை ஷாஹித் அப்ரிடியின் குடும்பத்தினரிடம் முன்வைத்ததாக பாகிஸ்தானின் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன, அதுவும் அவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், அஃப்ரிடியின் மூத்த மகளான அக்ஸா இன்னும் படித்துக்கொண்டிருக்கும் மாணவி என்பதால் இன்னும் இரண்டு ஆண்டுகள் எடுக்கும் என அந்த அறிக்கை மேலும் கூறியுள்ளது.
ஆனால் ஷாஹித் அப்ரிடியின் இன்றைய ட்விட்டர் பதிவு இது தொடர்பில் எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை என்பதை தெளிவுபடுத்துகிறது, இருப்பினும், அவர் ஷஹீன் அஃப்ரிடியின் வேண்டுகோளை மறுக்கவில்லை என தெரியவந்துள்ளது.
Post a Comment
எமது vision social media வின் இணையத்தளத்திற்கு உள் நுழைந்தமைக்கு மிக்க நன்றி.
உண்மை தகவல்களை அறிய எம்முடன் தொடர்ந்தும் இணைத்திருங்கள்.
மற்றும் எமது இணையதளதின் தகவல்களை ஏனையோர்களுடன் பரிமாற்றி கொள்ளவும்.
நன்றி 🤝