அமரர் ஆறுமுகன் தொண்டமான் ஐயா அவர்களின் விடா முயற்ச்சியின் பலனாகவும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் அழுத்தத்தினாலும் பெருந்தோட்ட தொழிலாளர்களின் 1000/- ரூபா சம்பள கோரிக்கைக்கு சம்பள நிர்ணய சபை அனுமதி
சம்பள நிணய சபையில் இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள உயர்வை வழங்குவதற்கான அனுமதி அளிக்கப்பட்டது அரசாங்கம் எடுத்த முயற்சிகளுக்கு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன் மற்றும் பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் ஆகியோர் நேரில் சந்தித்து பிரதமர் மகிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.
சம்பள நிர்ணய சபையில் இந்த விவகாரம் தொடர்பில் நடைபெற்ற வாக்கெடுப்பில் அரசுக்குச் சொந்தமான மூன்று பெருந்தோட்டக் கம்பனிகளும் ஆதரவாக வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
Post a Comment
எமது vision social media வின் இணையத்தளத்திற்கு உள் நுழைந்தமைக்கு மிக்க நன்றி.
உண்மை தகவல்களை அறிய எம்முடன் தொடர்ந்தும் இணைத்திருங்கள்.
மற்றும் எமது இணையதளதின் தகவல்களை ஏனையோர்களுடன் பரிமாற்றி கொள்ளவும்.
நன்றி 🤝