ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பதவியிலிருந்து மஹிந்த ராஜபக்ச விலகி தலைமைத்துவத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு வழங்க வேண்டும் என நேற்று லங்காதீப பத்திரிகைக்கு கொடுத்த செவ்வி சம்பந்தமாக அமைச்சர் விமல் வீர வன்ச மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் சட்டத்தரணி சாகல காரியவசம் கருத்து தெரிவித்துள்ளார் மேலும் அவர் கருத்து தெரிவிக்கும் போது இது விமல் வீரவன்சவின் கட்சியுமல்ல, அவருக்கு எமது கட்சியில் தீர்மானம் எடுப்பதற்கும், இப்படியான கருத்து தெரிவிக்கவும் எந்த வித அதிகாரமும் இல்லை என்றும் இவர் எமது சதோதர கட்சியின் தலைவர் மற்றும் பொறுப்பு மிக்க அமைச்சர் என்ற வகையிலும் இப்படியான கீழ்த்தரமான கருத்துக்களை தெரிவிப்பதற்கு நாங்கள் கவலைப்படுகின்றோம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment
எமது vision social media வின் இணையத்தளத்திற்கு உள் நுழைந்தமைக்கு மிக்க நன்றி.
உண்மை தகவல்களை அறிய எம்முடன் தொடர்ந்தும் இணைத்திருங்கள்.
மற்றும் எமது இணையதளதின் தகவல்களை ஏனையோர்களுடன் பரிமாற்றி கொள்ளவும்.
நன்றி 🤝