='https://pagead2.googlesyndication.com/ pagead/js/adsbygoogle.js'/> கடிதம்(கீழே 👇)எழுதிவிட்டு தூக்கிட்டு கொண்ட பொலிஸ் அதிகாரி 👇

கடிதம்(கீழே 👇)எழுதிவிட்டு தூக்கிட்டு கொண்ட பொலிஸ் அதிகாரி 👇


 தற்சமயம் நாடு முழுவதும் பேசுப்பொருளாக மாறியுள்ள பெண்ணின் கொலை சம்பவம் தொடர்பில் மற்றொரு விசேட தகவல்  கிடைக்கப்பெற்றுள்ளது.

கொழும்பு-டேம் வீதியில் கடந்த திங்கட்கிழமை பயணப்பொதியில் சுற்றிவைக்கப்பட்டிருந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது.

காவல்துறையினரின் சோதனை நடவடிக்கைகளை அடுத்து சடலமாக மீட்கப்பட்ட பெண் குருவிட்ட பகுதியை சேர்ந்த 30 வயதானவர் என தெரியவந்துள்ளது.

அத்துடன், இந்த பெண்ணின் சடலத்தை பயணப்பொதியில் கொண்டு வந்த நபரை சீ.சீ.டீ.வி மூலம் அடையாளம் கண்டது காவல்துறை.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் புத்தல காவல்துறை பிரிவில் காவல்துறை பரிசோதகராக சேவையாற்றி வரும் நபர் என்பது கண்டறியப்பட்டது.

இதனை தொடர்ந்து இவரை கைது செய்ய காவல்துறை  நடவடிக்கை எடுத்தது.

இந்நிலையில் சந்தேக நபர் இன்று காலை தது வீட்டுக்கருகில் உள்ள வனப்பகுதி ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவரது சடலத்துக்கருகில் தனது மனைவிக்காக எழுதிய கடிதம் ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளதாக காவல்துறை ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.இந்த கடிதத்தில் தனக்கு திருமணத்திற்கு அப்பால் ஒரு உறவு காணப்பட்டதாகவும் அந்த உறவு காரணமாக பல சிக்கல்களுக்கு முகங்கொடுக்க நேரிட்டதாகவும் காவல்துறை பரிசோதகர் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல் மனைவிக்கு தெரியாமல் தான் இழைத்த தவறுகளுக்காக மன்னிப்புக்கோருவதாகவும் அந்த கடிதத்தில் காவல்துறை பரிசோதகர் குறிப்பிட்டுள்ளார்.

கடிதம் கீழே இணைக்கப்பட்டுள்ளது 👇

  • எனது காதல் வெறுப்பாக மாறிவிட்டது தயவு செய்து என்னை மன்னிக்கவும்!’

யுவதியைக் கொலை செய்த சப் இன்ஸ்பெக்டர் தற்கொலைக்கு முன் மனைவிக்கு கடிதம்👇

  • இரத்தினபுரி – குருவிட்டை, தெப்பனாவ பகுதியைச் சேர்ந்த 30 வயது யுவதியை கொலை செய்து பயணப் பையில் அடைத்து டாம் வீதியில் கைவிட்டு சென்ற சந்தேக நபரான உப பொலிஸ் பரிசோதகர் தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில் அவர் தனது மனைவிக்கு எழுதிய கடிதம், அவரது படல்கும்புர – 5 ஆம் கட்டை வீட்டிலிருந்து பொலிஸாருக்கு கிடைத்துள்ளது.
  • அக்கடிதம் ஊடாக சடலமாக மீட்கப்பட்ட யுவதிக்கும், உப பொலிஸ் பரிசோதகருக்கும் இடையே நீண்ட நாட்கள் தகாத உறவு நிலவியுள்ளமை உறுதியாவதாகவும் அதன் காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக அனுமானிக்கப்படுவதாகவும் பொலிஸ் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
  • கொலை செய்யப்பட்ட யுவதி
  • கொலை சந்தேக நபராக கருதபப்டும் 52 வயதான உப பொலிஸ் பரிசோதகர் பேமசிறி (தற்கொலை செய்து கொண்டுள்ளவர்) ‘அம்மட’ என விழித்து எழுதியுள்ள மூன்று பக்கக் கடிதத்தில் கொல்லப்பட்ட பெண்ணுக்கும், சந்தேக நபருக்கும் இடையே நிலவிய உறவு, அதில் ஏற்பட்ட விரிசல், கொலை, பகிரங்கமாக்கும் வகையில் சடலத்தை கைவிட்டு சென்றமை போன்ற விடயங்களை தெளிவுபடுத்தும் வண்ணமாக விடயங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
  • குறிப்பாக மனைவி மீது அளவு கடந்த பாசத்தில் அம்மி, அம்மா போன்ற வார்த்தைகளால் சிங்கள மொழியில் விழிக்கப்படுவது உண்டு என கூறும் பொலிஸார், அவ்வாறானதொரு மொழிப் பிரயோகத்தையே இக்கடிதத்தில் குறித்த பொலிஸ் பரிசோதகர் தனது மனைவியை விழிக்க பயன் படுத்தியுள்ளதாக கூறினர்.
  • அக்கடிதத்தின் பிரகாரம், தனது குடும்பமே தனது உயிர் என குறிப்பிட்டுள்ள சந்தேக நபரான உப பொலிஸ் பரிசோதகர், தான் எப்படி நடந்து கொண்டிருந்தாலும் தனது உயிராக குடும்பத்தையே நேசித்ததாக குறிப்பிட்டுள்ளார்.
  • யுதியைக் கொலை செய்ததாக கூறப்படும் தற்கொலை செய்து கொண்ட  பொலிஸ் உத்தியோகத்தர் எஸ்.ஐ.அங்கள், எஸ்.ஐ.அங்கள் என தன்னை அழைத்து வந்த, தனது நண்பர் ஒருவரின் மகளுடனான தொடர்பு நாளடைவில் மாற்றமடைந்ததாக சுட்டிக்காட்டியுள்ள சந்தேக நபரான உப பொலிஸ் பரிசோதகர், அவள் கேட்டதையெல்லம் தான் செய்ததாகவும், அதனால் மனைவி பிள்ளைகள் மீது கூட தான் கோபத்தை காட்டியதாகவும் குறிப்பிட்டுள்ளார். அவளுடனான காதல், இறுதியில் வெறுப்பாக மாற்றமடைந்ததாக அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ள குறித்த உப பொலிஸ் பரிசோதகர் அந்த யுவதியுடனான தொடர்புகளை நிறுத்திக் கொள்ள தான் முடிவெடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
  • தனது தகாத உறவு தொடர்பில் மனைவியின் கோபத்தை (ஏற்கனவே வீட்டில் இதனால் பிரச்சினைகள் மூண்டுள்ளன) மிக நியாயமானது என இதன்போது குறிப்பிட்டுள்ள உப பொலிஸ் பரிசோதகர், அதன் மனத் தாக்கத்தை மனைவி என்ற ரீதியில் எந்தளவு தூரம் அனுபவித்திருப்பீர் என உணர்வதாகவும், அதனை தான் வாழ்க்கையில் தற்போது அனுபவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
  • தான் திட்டமிட்டு இந்த விடயத்தை செய்யவில்லை எனவும் அது நடந்திருக்கக் கூடாது எனவும் எழுதியுள்ள உப பொலிஸ் பரிசோதகர், எவ்வாறாயினும் தான் செய்த குற்றம், தவறினால் பொலிஸார் தன்னை நெருங்கி விட்டதாகவும், பொலிஸார் ஏதும் கேட்டால் தெரிந்தவை அனைத்தையும் கூறுமாறும் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். தான் செய்த குற்றத்தை மறைக்கும் வண்ணம் செயற்பட்டிருந்தால், பொலிஸார் மனைவி, பிள்ளைகளை விசாரணை என்ற பெயரில் சித்திரவதை செய்திருப்பர் எனவும் அக்கடிதத்தில் உப பொலிஸ் பரிசோதகர் எழுதியுள்ளார்.
  • மனைவிக்கு மூன்று பிள்ளைகளுடன் சந்தோசமாக வாழுமாறும், அவமானங்கள், கவலைகள் சில நாட்களில் கடந்துபோகும் எனவும் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ள உப பொலிசஸ் பரிசோதகர், தனது மனைவியை உறுதியான பெண் என வர்ணித்துள்ளார். உலகில் பிறப்பு, வாழ்வு மற்றும் மறைவு ஆகியன தொடரும் என குறிப்பிட்டு மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் கடவுளின் ஆசி உண்டாகட்டும் எனவும் அக்கடிதம் ஊடாக உப பொலிஸ் பரிசோதகர் பிரார்த்தனை செய்துள்ளார்.
  • இதனைவிட உப பொலிஸ் பரிசோதகரின் வங்கிக் கணக்கு அட்டைகளின் இரகசிய இலக்கங்கள், உள்ளிட்ட வங்கி விடயங்களையும், தனது தாயின் புண்ணிய தான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் அக்கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



Post a Comment

எமது vision social media வின் இணையத்தளத்திற்கு உள் நுழைந்தமைக்கு மிக்க நன்றி.
உண்மை தகவல்களை அறிய எம்முடன் தொடர்ந்தும் இணைத்திருங்கள்.
மற்றும் எமது இணையதளதின் தகவல்களை ஏனையோர்களுடன் பரிமாற்றி கொள்ளவும்.
நன்றி 🤝

Previous Post Next Post
Advertisment Available Here உங்கள் விளம்பரத்தை இங்கே பதிவிடலாம் அழையுங்கள் - 075-481 67 68 075-271 73 22 E-mai - visionsocialmediatamil@gmail.com